சொல்லிட்டாங்க...

உள்நாட்டு பொம்மை தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், 15 அமைச்சகங்களின் தலைமையில் தேசிய பொம்மை தயாரிப்பு திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. - பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்றம், சட்டமன்றம், பஞ்சாயத்து, நீதித்துறை, பத்திரிகை சுதந்திரம் மீது கடந்த 6 ஆண்டுகளாக ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

தமிழகத்தில் பாஜ நேரடியாக மோத முடியாது என்பதால் அதிமுகவின் பின்னால் இருந்து தேர்தலை சந்திக்கிறது. - மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் கரத்

வன்னியர்களுக்கு அவசரகதியில் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காகத்தான் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிகிறது. - அமமுக பொதுச்செயலாளர டிடிவி.தினகரன்

Related Stories: