×

கிரிக்கெட் பிட்ஸ்

இந்திய மகளிர் அணி அறிவிப்பு
தென் ஆப்ரிக்கா  மகளிர் அணி   இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள்,  3 டி20 தொடர்களில் விளையாட உள்ளது. மொத்தம் 5 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மார்ச் 7ம் தேதி முதல் மார்ச் 14ம் தேதி வரை நடக்கும். மேலும் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடர் மார்ச் 17ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரையிலும் நடைபெறும். அதற்காக மிதாலி ராஜ் தலைமையில் ஒருநாள் தொடருக்கான அணியும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் டி20 தொடருக்கான அணியும் பிசிசிஐ  அறிவித்துள்ளது. கடந்த  2020ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கு பிறகும், கொரோனா பீதிக்கும் பிறகு இந்திய மகளிர் அணி முதல்முறையாக சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. போட்டியில் பங்கேற்க உள்ள வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாறுகிறது ‘பிட்ச்’
இந்தியா-இங்கிலாந்து மோதிய 3வது டெஸ்ட்டுக்காக  உருவாக்கப்பட்ட ‘பிட்ச்’ நிறைய விமர்சனங்களுக்கு உள் ளானது. அது இந்திய  வீரர்களுக்கு இடையிலான விவாதமாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் இந்த 2  அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் மார்ச் 4ம் தேதி  தொடங்கிறது.  அதற்காக  உருவாக்கப்படும் ‘பிட்ச்’ பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று  தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனாவால் மாற்றம்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி. அணி அங்கு 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்த நிலையில் நியூசி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் ஆக்லாந்து உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால் நியூசி-ஆஸி அட்டவணையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இனி நடைபெற உள்ள 3 டி20 ஆட்டங்களும் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும்.


Tags : South Africa Women's Team India
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...