அசாம் சட்டப்பேரவை தேர்தலில் திருப்பம்: பாஜ கூட்டணியில் இருந்து விலகியது போடோ கட்சி

கவுகாத்தி: அசாமில் ஊழலற்ற ஆட்சி அமையவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காவும் பாஜ தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு மாறுவதாக போடோலாந்து மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.அசாமில் முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெறுகிறது. இங்கு வரும் மார்ச் 27, ஏப்ரல் 1, 6 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 126 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து பாஜ.வின் பலம் 75 ஆக இருக்கிறது. இந்நிலையில், அதன் கூட்டணியில் இருந்து விலகுவதாக போடோலாந்து மக்கள் முன்னணி நேற்று அறிவித்தது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் ஹக்ராமா மொகிலாரி கூறுகையில், அசாமில் ஊழலற்ற, நிலையான ஆட்சி அமையவும், அமைதி, ஒற்றுமை, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜ கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளோம்,’’ என்று தெரிவித்தார். தற்போது, தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், அசாமில் மட்டுமே பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், கூட்டணியில் இருந்து போடோலாந்து மக்கள் முன்னணி விலகுவதால், அசாம், பாஜ.விடம் இருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>