பாலகோட் தாக்குதல் 2ம் நினைவு தினம் நீண்ட தூர இலக்குகளை தகர்த்தது விமானப் படை: மர்ம இடத்தில் வெற்றிகர சோதனை

புதுடெல்லி: பாலகோட் தீவிரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்த இந்திய விமானப்படையின் அதே போர் விமானங்கள், நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக, அதே ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை போர் விமானங்கள், பாலகோட்டில் செயல்பட்டு வந்த தீவிரவாத பயிற்சி முகாம்களை குண்டு வீசி அழித்தன. இந்த தாக்குதலின் 2ம் ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, இந்த தாக்குதலை நடத்திய அதே விமானப்படை போர் விமானங்கள், நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை ஏவுகணைகள், குண்டுகளை வீசி துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. இதில், விமானப்படை தளபதி பதவுரியாவும் பங்கேற்றுள்ளார். ஆனால், இந்த சோதனை எப்போது, எந்த இடத்தில் நடத்தப்பட்டது என்ற விவரத்தை விமானப்படை வெளியிடவில்லை.

Related Stories: