பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தண்டையார்பேட்டை:சென்னை வள்ளலார் நகரில்  புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:வடசென்னை மக்கள் மேம்பாட்டிற்காக குறுகிய நாட்களில் தொலைநோக்கு திட்டம் பலவற்றை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகதான் வண்ணாரப் பேட்டை விம்கோ நகர் மெட்ரோ ரயில்  சேவையை மாநில அரசு செயல்படுத்தி யுள்ளது.  அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசியது தனியரசுவின் தனிப்பட்ட கருத்து.  வரும் தேர்தலில் சசிகலா இல்லாத அதிமுக கூட்டணி அமோக  வெற்றிபெற்று மீண்டும் 2021ல் ஆட்சி அமைக்கும்.மத்திய அரசுக்கு வரி வருவாய்  பல இடங்களில் இருந்து வருகிறது. மாநில அரசின் வரி வருவாய்  என்பது குறைந்த அளவிலேயே இருப்பதால்  இதற்காக மக்களிடம் வரி விதிக்க முடியாது. மத்திய  அரசுதான் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும். அதிமுகவை மீட்டெடுப்போம் என்ற தினகரன் கூறியுள்ளார். ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது. இவ்வாறு  ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories:

>