தமிழக சட்டமன்ற தேர்தல் செலவினங்களுக்கு ரூ.102.38 கோடி ஒதுக்கீடு : பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தேர்தல் ெசலவினங்களுக்கு ₹102.38 கோடிக்கு துணை பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து நிறைவேற்றினார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அவர் கூறுகையில், ‘2020-21ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை இந்த மன்றத்தின் முன்வைக்கிறேன். கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் இதர அவசர தேவைகளின் காரணமாக அரசு கணக்கில் ஏற்பட்ட கூடுதல் செலவினங்கள் இந்த துணை பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறது.

தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதியை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் சில முக்கிய செலவினங்களை தற்போது கூறமுடியாது. இறுதி துணை மதிப்பீடுகளில் எந்தவொரு புதிய திட்டத்தின் அறிவிப்போ அல்லது செலவினங்களுக்கான புதிய இனங்களோ சேர்க்கப்படவில்லை.

சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்காக ₹102.92 கோடி தேவைப்படுகிறது. அதற்காக இந்த துணை பட்ஜெட்டில் ₹102.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ₹21,172.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்கிறது. இவற்றில் ₹17,790.85 கோடி வருவாய் கணக்கிலும், ₹3,381.97 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும் என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதற்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories:

>