மீண்டும் வருவேனா என்று கூட நினைத்தேன்..தீவிர சிகிச்சை அளிக்க உதவிய முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி : அமைச்சர் காமராஜ் கண்ணீர்!!

சென்னை : சட்டப்பேரவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு உணவு அமைச்சர் காமராஜ் இன்று சட்டசபையில் பேசினார். அவர் கூறுகையில், ‘கடந்த மாதம் 5ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தேன். மீண்டும் கடந்த 19ம் தேதி அதிதீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைப்பேனா, இந்த அவைக்கு மீண்டும் வருவேனா என்று கூட நான் நினைத்ததுண்டு. அந்தளவு எனது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. எனக்கு இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து, இப்பேரவைக்கு வர ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார். எனக்கு 2வது முறையாக கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது, தமிழக முதல்வர் டெல்லியில் இருந்தார்.

அங்கிருந்தபடியே என் உடல்நலம் குறித்து விசாரித்தார். துணை முதல்வரும் அடிக்கடி தொடர்பு

ெகாண்டு எனது உடல்நலத்தை விசாரித்தார். எனக்கு தீவிர சிகிச்சை அளிக்க உதவிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று உருக்கமாக பேசினார்.தொடர்ந்து சபாநாயகர் தனபால் பேசுகையில், ‘தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் நான் மிகவும் கவலைப்பட்டேன். உங்கள் மகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன். நீங்கள் சட்டசபைக்கு வந்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி, முதல்வரின் பாசம், துணை முதல்வரின் நேசம் உங்களுக்கு எப்போதும் உண்டு. நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இதையடுத்து அமைச்சர் காமராஜ் இருக்கையிலிருந்து எழுந்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்து வணக்கம்’ கூறினார்.

Related Stories: