×

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

மணப்பாறை : மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு தெருமக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.மணப்பாறை அருகே வையம்பட்டி அடுத்த செக்கனம் ஊராட்சியில் மந்திரியார் தெரு உள்ளது. இங்கு 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதிக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை.

இதனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் 2 கி.மீ. தூரம் நடந்து சென்றும், சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றும் குடிநீர் எடுத்துவரும் அவலம் அல்லது சைக்கிள், டூவீலர்கள் சென்று குடிநீர் எடுத்தும் வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வினியோகிக்க கோரி அப்பகுதி மக்கள் கரூர்- திண்டுக்கல் சாலையில் கருங்குளம் என்ற இடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் வையம்பட்டி-கரூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Manapparai , Manapparai: Street people blockaded the road near Manapparai demanding drinking water. Next to Vaiyampatti near Manapparai
× RELATED மணப்பாறை அருகே பஸ்கள் நிற்காததால் மக்கள் மறியல்