இளையான்குடியில் குப்பையில் கிடக்கும் குப்பைத்தொட்டி

இளையான்குடி :  இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு வந்தது. தெருக்களில் குப்பைகள் கொட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு அகற்றப்பட்டு வந்தது. குப்பைத்தொட்டிகள் இல்லாத தெருக்களில் பொதுமக்களிடமிருந்து குப்பை வண்டிகள் மூலம் வாங்கப்பட்டு, குப்பைக்கிடங்கில் சேர்க்கப்பட்டது.

ஆனால், தற்போது இரும்பு குப்பை தொட்டிகள் அனைத்தும் சேதமடைந்து குப்பையோடு குப்பையாக  வீசப்பட்டு கிடக்கிறது. அதனால் பொதுமக்கள் சாலையோரத்தில் குப்பைகளை வீசிச்செல்வதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. அத்துடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.  எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: