×

கூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம்...கலைஞர் மீது எனக்கு மரியாதை உள்ளது : கமல்ஹாசன் பேட்டி!!

சென்னை : தங்கள் கூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். பழ.கருப்பையாவை மக்கள் நீதி மய்யத்துக்கு உளமாற வரவேற்கிறேன்.

மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கிறது. அவர்களுடன் இணைந்து தேர்தலை களம் காணவிருக்கிறோம். மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7ம் தேதி வெளியாகும் என்றும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் வேட்பாளர் நேர்காணலை பொன்ராஜ், ரங்கராஜன், செந்தில் ஆறுமுகம் மற்றும் சுரேஷ் ஐய்யர் ஆகியோர் நடத்தவுள்ளனர்,என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து சக்கர நாற்காலி தொடர்பான நிரூபர்களின் கேள்விக்கு பதிலளித்துபேசிய அவர், சக்கர நாற்காலி விவகாரத்தில் கேலி செய்யும் விதத்தில் தாம் பேசவில்லை. சக்கர நாற்காலியில் கலைஞர் அமர்ந்திருந்தபோது அதனை பிடித்து தள்ளிக் கொண்டு வந்த கூட்டத்தில் நானும் ஒருவன். வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசும் வாய்ப்பே கிடையாது. கலைஞர் மீது தமக்கு மரியாதை உள்ளது. என்னுடைய முதுமையை பற்றித்தான் சொல்லிக் கொண்டு இருந்தேன்.கலைஞர் இருந்திருந்தால் நான் சொல்வதை புரிந்திருப்பார், என்றார். மேலும் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் தாம் தான் என்று கூறிய கமல், கூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம் என்றார்.


Tags : Kamallhassan , கமல்ஹாசன்
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான...