கரகம் சுமந்து வயலில் நடனமாடி நாற்று நட்ட அரியலூர் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டு

அரியலூர் : கரகம் சுமந்து வயலில் நடனமாடி நாற்று நட்டிய மாற்றுத்திறனாளி மாணவி இந்தியன் புக்ஆப் ரெக்காட்ஸ் விருது பெற்றார். அவரை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா பாராட்டினார்.அரியலூர் மாவட்டம், பெரியத்திருக்கோணம் கிராமத்தை சேர்ந்த பாண்டின், மாலா தம்பதியரின் மகளான மாற்றுத்திறனாளியான கிருஷ்ணவேனி என்பவர் ஜெயங்கொண்டம் ஓ-ரோடு ஹெலன் ஹெல்லர் செவித்திறன் குறைபாடுடையோர் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.

அவர் கரகம் சுமந்தபடியே வயலில் நடனம் ஆடிக்கொண்டு 1 மணி நேரம் நாற்று நட்டார். இந்த சாதனை இந்தியன் புக்ஆப் ரெக்காட்ஸ் அங்கீகரித்து, அதற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் புக்ஆப் ரெக்காட்ஸ் விருது பெற்ற மாணவி கிருஷ்ணவேனி மாவட்ட கலெக்டர் ரத்னா, சந்தித்து, தான் பெற்ற விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்தியன் புக்ஆப் ரெக்காட்ஸ் விருது பெற்ற மாணவியை பாராட்டிய கலெக்டர் ரத்னா, இதுபோன்று பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்திற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: