காடுவெட்டி குரு மகன் ஊர்வலத்தில் பொக்லைன் இயந்திரத்தை சேதப்படுத்தியதால் மறியல்-போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் : காடு வெட்டி குருவின் மகன் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது பெர ம்பலூர் ஊர்வலத்தில் குறுக்கே சென்ற பொக்லைன் இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதால், சாலைமறியல் போராட்டம் நடந்தது. வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின், மகன் குரு கனலரசன் திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுதலையானார். அவரது மாவீரன் மஞ்சள்படை இயக்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களால் வாகனங்களில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் வழியாக அரியலூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக மாவீரன் மஞ்சள் படையை சேர்ந்த தொண்டர்களின் உற்சாக கூச்சலுடன் பெரம்பலூர் நகருக்குள் வலம் வந்தனர். அப்போது, பாலக்கரையில் பொக்லைன் வாகனம் குறுக்கே வந்ததால், ஆத்திரமடைந்த மாவீரன் மஞ்சள் படை இயக்கத்தினர் பொக்லைன் ஒட்டுநரை தாக்கி, இயந்திரத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெரம்பலூர் பொக்லைன் ஒட்டுநர்கள் பாலக்கரையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து அங்குவந்த பெரம்பலூர் போலீசார் சமரசம் செய்து, விசாரணை நடத்துவதாக போலீசார் உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: