தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

பெரம்பலூர் : தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம்தேதி நடைபெற உள்ளதாக நேற்று மாலை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வெங்கட பிரியா உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 எம்எல்ஏ அலுவலகங்களை, தாசில்தார்கள் மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இதன்படி பெரம்பலூர் மதர ஸா சாலையிலுள்ள பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை பெரம்பலூர் தாசில்தார் சின்னதுரை பூட்டி சீல்வைத்தார். அப்போது, துணை தாசில்தார் (தேர் தல்) ஷர்மிளா, வருவாய் ஆய்வாளர் இளங்கோவன், விஏஓ ஞானப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் குன்னம் எம்எல்ஏ அலுவலகத்தை குன்னம் தாசில்தார் கிருஷ்ணராஜ் பூட்டி சீல் வைத்தார். துணை தாசில்தார் (தேர்தல்) கீதா, தலைமையிடத்து துணை தாசில்தார் மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: