×

பிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை மோடி வைத்துள்ளார் : மு.க.ஸ்டாலின் விளாசல்!!

காஞ்சிபுரம் : வன்னியர் இடஒதுக்கீட்டை திமுக தான் செயல்படுத்தும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் உங்கள்தொகுதியில் ஸ்டாலின் பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நேற்று சட்டமன்றத்தில் அறிவித்த வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை நாம் தான் செயல்படுத்தணும். உள் ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான்; முதல்வர் பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர் சென்னை அருகேயுள்ள நீர் நிலைகளையே தூர்வாரவில்லை. அப்படி இருக்கும் போது தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள். 4 ஆண்டுகளில் அரசு கஜானாவைத்தான் அதிமுகவினர் தூர்வாரியுள்ளனர்” என்று விமர்சித்தார்.

மேலும் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, மக்கள் எழுச்சியை பார்க்கும் போது  234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என நினைக்கிறன்.பிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை மோடி வைத்துள்ளார்.ஒரு எம்.பி. எம்எல்ஏ கூட இல்லாத பாஜக திமுகவை பலம் இழந்தது என்பதா ?. சட்டமன்றத்தில் பலம் பொருந்திய எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது திமுக. வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதாக அதிமுக அரசு அறிவித்து இருப்பது வெற்று அறிவிப்பு தான். கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிடுகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு உண்மையான உள் ஒதுக்கீடு அமலாகும், என்றார். முன்னதாக விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய பல்வேறு நபர்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.


Tags : Modi ,Stalin , மு.க.ஸ்டாலின்
× RELATED பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுக்க...