×

அதிமுக கூட்டணியில் இருந்து கூட்டணி குறித்து யாரும் பேசாததால், அங்கிருந்து விலகினேன்: சரத்குமார் பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து கூட்டணி குறித்து யாரும் பேசாததால், அங்கிருந்து விலகியதாக சமக தலைவர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார். ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலை சந்தித்த பின் சரத்குமார் பேட்டியளித்துள்ளார். நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என கமல்ஹாசன் கூறியதால் சிறப்பான கூட்டணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். நல்லவர்கள், ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி வைக்கப்படும் என்று சரத்குமார் அறிவித்துள்ளார். எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

Tags : High Alliance ,Saratkumar , Sarathkumar
× RELATED 7 செக் மோசடி வழக்கில் நடிகர்...