பெரும்பான்மை இல்லை என்றாலும் சுயமான கருத்தில் உறுதியாக நிற்போம் : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் சூசகம்!!

சென்னை : பெரும்பான்மை இல்லை என்றாலும் சுயமான கருத்தில் உறுதியாக நிற்போம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக 3 கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு பொருளை விற்பனை செய்வதற்கு பல வழிமுறைகள் உண்டு. ஆனால் தற்போது கருத்துகளையே வற்புறுத்தி விற்பனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்துக்களை விற்பது தமது சுயமாக சிந்திக்க தெரியாது என்று கூறுவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆனால் நீங்கள் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையே எங்களால் சொல்லி கொடுக்க முடியும் என்று கூறியுள்ள அஸ்வின், எதை தேர்வு செய்ய வேண்டும் என்பது எங்களது உரிமை என்று கூறியுள்ளார்.

பெரும்பான்மை இருப்பதால் உங்களது கருத்து சரி என்று ஆகிவிடாது என்று அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் விவசாயிகளின் போராட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்வினையை ஆற்றி வந்த நிலையில், அஸ்வினின் இந்த ட்விட்டர் பதிவு அரசுக்கு எதிரானதாக கருதப்பட்டது. ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள அஸ்வின், தான் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும் அது தொடர்பாக மட்டுமே இந்த பதிவை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். இதன் மூலம் அண்மையில் யுவராஜ் சிங் அவர்களின் ட்விட்டர் பதிவுக்கு கூட இது பதிலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Related Stories:

>