×

அட்டகாசமான விலை சரிவு... சவரன் ரூ.256 குறைந்து ரூ.34,648க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல்!!

சென்னை : சென்னையில் தங்கம் விலை இன்று 256 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் தங்கம் விலை 1,600 ரூபாய் வரையில் குறைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ச்சியான விலையேற்றம் இருப்பதால் நகை வாங்குவோர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும் கடந்த 2 நாட்களாக ஆறுதல் தரும் விதமாக, விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்...

சென்னையில் இன்று (பிப்ரவரி 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,331 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,463 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு32  ரூபாய் குறைந்துள்ளது.அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 256 ரூபாய் குறைந்து 34,648 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.73.30ஆக இருந்தது. இன்று அது ரூ.72.50ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : தங்கம்
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...