×

தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை

சென்னை: தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகின்றனர். தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை முதல்வரை சந்திக்கிறார். நாளை காரைக்கால், விழுப்புரத்தில் நடைபெறும் கூட்டங்களில் அமித்ஷா பங்கேற்கிறார்.

3 நாள் பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி என்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காலை 10.45 மணிக்கு ராகுல் காந்தி வருகிறார். காலை 11.15 மணிக்கு தூத்துக்குடி வி.ஓ.சி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார். பிற்பகல் 12.45 மணிக்கு தூத்துக்குடி குரூப்ஸ் பர்னாந்து சிலை அருகே ராகுல் காந்தி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். ராகுல் காந்தி தூத்துக்குடி கோவங்காடு பகுதியில் உப்பள தொழிலாளர்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.

2 நாள் பயணமாக டெல்லியிலிருந்து இன்றிரவு 10 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். அமித்ஷா காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நாளை நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக பேச்சுவார்த்தையை தொடங்கியது. சென்னை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் பாஜக பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். முதல்வர் பழனிசாமியுடன் பாஜகவின் கிஷண் ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி, எல்.முருகன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். முதல்வர் பழனிச்சாமியுடன் பேசிய பின்னர் பாஜக குழு துணை முதல்வர் ஓ.பி.எஸ்-சை தனியாக சந்தித்து பேசுகின்றனர்.

Tags : Rakulkanti ,President of Congress ,Interior Minister ,Amidsha ,TN , Rahul Gandhi, Amitsha
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...