செய்தி துளிகள்...

* 19 லட்சம் தங்கம் பறிமுதல்: துபாயிலிருந்து நேற்று சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், ஹீட்டருக்குள் மறைத்து 19 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது நஷிப்பை (21), சுங்கத்துறையினர் கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

* 75 பைக்குகள் பறிமுதல்: விருகம்பாக்கம், வளசரவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வேலூரை சேர்ந்த யுவராஜ் (37), சரத்பாபு (39) ஆகியோரை போலீசார் கைது செய்து 75 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

* மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி: அயனாவரம் திக்காகுளம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜேம்ஸ் மார்ட்டின் (48), நேற்று முன்தினம் மாலை பெரம்பூர் பாக்ஸ்சன்  தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு மணல் இறக்க சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

* பெண்ணிடம் 4 சவரன் பறிப்பு: வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்செல்வி (35), தனது கணவருடன் நேற்று முன்தினம் கொளத்தூரில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த மர்மநபர், இவரது கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.

* கஞ்சா விற்ற 4 பேர் கைது: வடபழனி குமரன் காலனி 6வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பெனமல்லூர் கிராமம், தாடி கடப்பா ரோடு பகுதியை சேர்ந்த தர்மதேஜா (21), சங்கோல் பிரகாசம் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (21), விஜயவாடா, சத்யநாராயணபுரத்தை சேர்ந்த சீதாராமன் (21), குண்டூர் பகுதியை சேர்ந்த கவுதம் (23) ஆகிய  4 பேரை  போலீசார் கைது செய்து, 5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

* போக்சோவில் வாலிபர் கைது: பெரவள்ளூர் ஜிகேஎம் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சார்லஸ் (37) என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

* ஸ்ரீகொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றிய கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் 4வது தெருவை சேர்ந்த சிவ சூர்யாவை (19), போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

* இளம்பெண் தற்கொலை: சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி லட்சுமி (35). மனநல  பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* பெண் தீக்குளிப்பு: கொடுங்கையூர் மாதவரம் மில்க் காலனியை சேர்ந்த ராஜய்யா மனைவி கவுரி (46), மன அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மாலை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 50 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

* போலி காவலர் கைது: தரமணி பள்ளிப்பட்டு சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் போலீஸ்காரர் போல் நடித்து, பணம் கேட்டு மிரட்டிய கோட்டூர் மண்டபம் சாலையை சேர்ந்த மகேஷ்குமாரை (46), போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>