வாகன விபத்தில் 2 பேர் பலி

மதுராந்தகம்: சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில், தொழிலதிபர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சென்னை, அண்ணா நகரை சேர்ந்தவர் வின்சென்ட்பாபு (60). தொழிலதிபர். கடந்த சில நாட்களுக்கு முன் வின்சென்ட்பாபு, தனது உறவினர் சண்முகசுந்தரம் (59), நண்பர்கள் 2 பேருடன் கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து 4 பேரும் நேற்று முன்தினம் இரவு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே வடபாதி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, பனி மூட்டம் காரணமாக, கார் நிலைதடுமாறி சாலையோர மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில், காரை ஓட்டி வந்த வின்சென்ட்பாபு, பக்கத்தில் உட்கார்ந்து இருந்த சண்முகசுந்தரம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து படாளம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>