சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்

சென்னை: ஆவடி அருகே கொள்ளுமேடு கே.வி.எஸ். நகர் மெயின் ரோட்டில் ஸ்ரீஜெய் சீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயில் 3ம் ஆண்டு கும்பாபிஷேகம் மற்றும் கிருஷ்ணர் பிரதிஷ்டை விழா வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர் அ.பிரபாகரன் தலைமையில் நடந்தது. வேத விற்பன்னர்கள் புனித நீரை சுமந்து வந்து கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் கே.வி.எஸ் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக விநாயகர், ஆஞ்சநேயர், ஜெய் சீரடி சாய்பாபா, மகாலட்சுமி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் விக்னேஷ்வரர் பூஜை, புண்யாஹவாசனம், கிராமசாந்தி, 108 அஷ்டலட்சுமி ஹோமம், சாய்பாபா மூலமந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து  சாய் கனநாதாவின் பக்தி பஜனை பாடல்கள் நடந்தது. பக்தி பாடல்களை பாடி பக்தர்களை மகிழ்வித்தனர். மாலையில் பாபாவுக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு சாரட்  வாகனத்தில் பாபா வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை, மதியம், இரவு சிறப்பு அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>