இளம்பெண் தற்கொலை

பொன்னேரி: பழவேற்காடு நடுவர் மாதாகுப்பத்தை சேர்ந்தவர் ஆல்வின்(25). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த சவுமியா(22) என்பவருக்கும் கடந்த 3ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு  பழவேற்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சவுமியா அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சவுமியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 23 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.

Related Stories:

>