மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: லாரி டிரைவர் கைது

பூந்தமல்லி: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்த 25 வயது பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் நடந்த ஆபரேஷனுக்கு பிறகு அவரால் நடக்க முடியவில்லை. மேலும், அவர் வாய் பேச முடியாமலும், காது கேட்காமலும் இருந்து வருகிறார். அவரது தாயார் நேற்று முன்தினம் அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், வீட்டின் அருகில் வசிக்கும் முத்து(36). லாரி டிரைவர் வீட்டிற்குள் புகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண், தன் தாயாரிடம் முத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சைகை மூலம் கூறி கதறி அழுதுள்ளார். புகாரின்பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து முத்துவை கைது செய்தனர்.

 ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில் ஆவடி போலீசார் விசாரித்தனர். அதில் ஆவடி நந்தவனமேட்டூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஞானப்பிரகாசம்(20). கூலித்தொழிலாளி சிறுமியை கடத்தி சென்று கட்டாய தாலி கட்டி தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, நேற்று மாலை போலீசார் தலைமறைவாக இருந்த ஞானப்பிரகாசத்தை போக்சோவின் கீழ் கைது செய்து அவரிடமிருந்து சிறுமியை மீட்டனர். தொடர்ந்து அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>