தேமுதிக ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த பூத் பொறுப்பாளர்கள்

நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருச்செங்கோட்டுல நடந்துச்சு. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும்னு அறிவிச்சிருந்தும், தொண்டர்கள் யாருமே வராததால, 2 மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு தான் தொடங்கிச்சு. பல வரிசைகள்ல போட்டிருந்த இருக்கைகள் குறைக்கப்பட்டு, சில வரிசைகளாக மாத்தப்பட்டது. கூட்டத்தில் பேசுன மாவட்ட அவைத்தலைவர் விஜய் சரவணன், ‘ஒவ்வொரு நிர்வாகியையும் பலதடவ போனில் தொடர்பு கொண்டு கூப்பிட்டேன். இதே மண்டபத்தில் கடந்த முறை நடந்த கூட்டத்துக்கு வந்தவங்கள்ல 3ல் ஒரு பங்கு கூட இன்னிக்கு வரலை.

முந்தைய கூட்டத்தில் 60 தேர்தல் பொறுப்பாளர்கள், 300 பூத்களுக்கு தலா 10 உறுப்பினர்கள் வீதம் நியமிக்கப்பட்டனர். ஆனால், அதுல நிறைய பேரு வரலை. பதவி வாங்கியவர்கள் கட்சிக்கு வேலை செய்யணும். அப்படி முடியாதவங்க பொறுப்பு வேண்டாம்னு சொல்லிடணும்’ என கொட்டி தீர்த்துட்டாரு.  மாவட்ட செயலாளர் முத்துசாமி், ‘மொத்தம் 323 பூத் இருக்கிறது. பூத்திற்கு ஒருத்தர் வந்திருந்தா கூட, 323 பேர் கூட்டத்துக்கு வந்திருக்கலாம்’ என விரக்தியோட உச்சத்திற்கே போயிட்டாரு. ஆனா, தேர்தல்ல கூட்டணியா, தனித்து போட்டியான்னே இதுவரை அறிவிக்கல. மற்ற கட்சிகள் வேகமாக தேர்தல் பிரசாரம் செய்யுறப்போ, நாங்க எந்த முகத்தை வச்சிக்கிட்டு பிரசாரம் செய்றது? என கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் சிலர் ஆதங்கப்பட்டனர்.

Related Stories: