ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு: இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சமூக அநீதி: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில தலைவர் அன்பரசு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மொத்தம் 16 லட்சம் பணியிடங்கள் உள்ளது. இதில், 4 லட்சம் காலி பணியிடம் போக, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போக 10 லட்சம் ஊழியர்கள் பணியில் இருக்கின்றனர். இந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்று எந்த ஒரு அரசு ஊழியர்கள் அமைப்புகளோ, எந்த ஒரு ஆசிரியர் அமைப்புகளோ இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. யாரும் கோரிக்கை ைவக்காத ஒரு அம்சத்தை 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார் என்றால் அவருக்கு தான் மனமகிழ்வு. தமிழக அரசு கடன் ரூ.4.85 கோடியாக உள்ளது. அடுத்த ஆண்டில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தவறான ஒரு புரிதல் மூலம் இதை மீட்டெடுக்கலாம் என்று நினைத்தது மிகப்பெரிய தவறு. ஒரு மாதத்துக்கு சராசரியாக ஓய்வு பெறுவர்களின் எண்ணிக்கை 2,500 முதல் 3000 பேர் வரை. கடந்த ஆண்டு 58 வயதில் இருந்து 59 வயதாக ஆக்கும் போது, 36 ஆயிரம் பேர் ஓய்வு பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இப்போது, மேலும், 60 வயதாக உயர்த்தும்போது, இதன் சராசரி 36 ஆயிரம் பேர் வரை இந்தாண்டு ஓய்வு பெற முடியாது. அப்படி பார்த்தால் 80 ஆயிரம் பேர் வரை ஓய்வு பெற முடியாமல் பணியில் இருக்கின்றனர். இவர்களால் பலருக்கு பதவி உயர்வு பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இன்னொருபுறம் அரசு அலுவலகத்தில் 4 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளது. இப்போது, ஓய்வு பெற முடியாதவர்கள் பணிபுரிவதால், இதுவும் சேர்ந்து 5 லட்சமாக மாறி விட்டது. இதனால், படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் வேலை வாய்ப்பில் பதிவு செய்தோ, டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு எழுதி ேவலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் வேலைவாய்ப்பை பறிக்க கூடிய ஒரு சமூக அநீதியாக தான் இதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பார்க்கிறது. ஏற்கனவே, அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசு சுணக்கம் காட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பானது மேலும், இளைஞர்களை தவிப்பில் ஆழ்த்தி விடும் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை புதிர்காலமாக மாற்றியுள்ளது. தற்போது 30 வயதை எட்டவிருக்கும் இளைஞர்கள் தங்களின் அரசு வேலைக்கான வாய்ப்பையும், வருவாயையும் தவற விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது எந்த விதத்திலும் எங்களுக்கு நன்மை கிடையாது. இந்த அறிவிப்பு எங்களுடைய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடு தான். ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெற்றால் சராசரியாக ரூ.25 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும். அதிகப்பட்சமாக தலைமை செயலகத்தில் பணியாற்றக்கூடிய துணை செயலாளர், இணை செயலாளர், செயலாளர் போன்ற பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஓய்வு பெற்றால் அவர்களுக்கு ரூ.45 லட்சம் வரை கிடைக்கும். 80 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவதாக இருந்தால் ரூ.6 ஆயிரம் கோடி செலவழிக்க வேண்டி வரும். இந்த தொகை என்பது ஓய்வூதியத்தில் எங்களுக்கான பங்களிப்பை முடக்குவதற்கான ஏற்பாடு தான். இதனால், எங்களுக்கு சர்வீஸ் அதிகரித்தாலும், சமூக அநீதியாக தான் பார்க்கிறோம்.  அம்மாவின் அரசு என்று சொல்லக்கூடிய இந்த அரசு, ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பை கூட நிறைவேற்றாமல் ஏமாற்றுகின்றனர். வரக்கூடிய ஆட்சியாளர்களிடம் எங்களது பழைய பென்ஷனை கொடுங்கள் என்று கேட்டுள்ளோம்.

30 முதல் 35 ஆண்டுகள் வரை வேலை செய்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் 3.50 லட்சம் பேர் ஓய்வு பெற்றால் ஒன்றுமே இல்லாமல் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களக்கு குறைந்தபட்ச பென்ஷன் வரையறுக்கப்பட்ட ஊதியத்தை கேட்கிறோம். அதை வரும் ஆளக்கூடிய அரசு செயது தர வேண்டும். எங்களுக்கு ஊதிய முரண்பாடுகள் மற்றும் மற்றப்படி போடப்பட்ட கமிட்டியின் அறிக்கை வரவில்லை என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேணடும். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியுள்ளனர். எந்த அரசும் பொறுப்பேற்கும் போது செய்வோம் என்று தான் கூறுவார்கள். செய்ய மாட்டோம் என்று சொல்ல மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் செய்வோம்  என்று தான் செல்வார்கள். செய்தால் அவர்களுக்கு நல்லது. இல்லையெனில் எடப்பாடி அரசுக்கு எதிராக போராடுகிறோமோ அதே நிலைமை தான். இளைஞர்களின் வேலைவாய்ப்பினை காத்திடும் வகையிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பதவி உயர்வினை பாதுகாக்கும் வகையிலும், அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதினை ேமலும் உயர்த்தாமல் தமிழக அரசு சமூக நீதியையும், சமூக அமைதியையும் காக்க வேண்டும்.

Related Stories: