மாமல்லபுரத்தில் சாலைகள் மோசம்: மாமல்லபுரம் கவாஸ்கர் (சிற்ப கலைஞர்)

மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இந்த மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும். ஆனால், தமிழக அரசு சார்பில் பயணிகள் வசதிக்காக எதுவும் செய்யவில்லை. பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரத்தில் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ்கள் கடந்த 7 ஆண்டுக்கு முன் எந்த ஒரு அறிவிப்புமின்றி திடீரென நிதுத்தப்பட்டது. எனவே சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக குளிர்சாதன பஸ்கள் இயக்க வேண்டும் என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளை புதுப்பித்து தரக்கோரி பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்போரூர் தொகுதிக்குட்பட்டு மாமல்லபுரம் வருகிறது. இந்த தொகுதி திமுக வசம் இருப்பதால், இந்த தொகுதிக்கு அரசு முக்கியத்துவம் தருவதில்லை.

Related Stories: