நூற்றுக்கணக்கான சமுதாய மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த எடப்பாடி பழனிசாமி: - முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் கருணாஸ்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை எப்படி பார்க்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாய மக்களும் அவர்களின் உரிமையை கேட்பதில் எனக்கு எந்த வித மாறுபட்ட கருத்தும் இல்லை. அதேநேரத்தில் இடஒதுக்கீடு என்று வரும்போது, தமிழகத்தில் ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். 336க்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் வாழுகின்ற இந்த மாநிலத்தில் தேர்தலுக்காக, தேர்தல் ஆதாயத்திற்காக, ஒரு சிலரை திருப்திப்படுத்த பலரை புறக்கணித்து இந்த மாதிரியான போக்கை அரசு எடுத்துள்ளது. எங்களை போன்ற சமுதாய மக்கள் 26 வருடங்களாக போராடி வருகிறோம். அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை.  ஒருசில சமுதாயங்களை கையில் எடுத்து தேர்தலுக்காக இதுபோன்ற வேலையை செய்கிறார்கள். வடக்கே வன்னியர்கள் தான் அதிகம் இருப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளார்கள். ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தும்போது அந்த உண்மை தெரிந்துவிடும். இது ஓட்டுக்காக, அரசியலுக்காக செய்யக்கூடிய ஒரு சூழ்ச்சி தான்.

முக்குலத்தோர் சமூகத்தை இந்த அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது. இது வெளிப்படையாக தெரிகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களை இந்த அரசு ஏமாற்றுகிறது. ஒருசிலரை திருப்திப்படுத்த நூற்றுக்கணக்கான சமுதாய மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து அவர்களின் வாக்குகளை எதிர்ப்பு வாக்குகளாக மாற்றுவதற்கு இந்த அரசு வழிவகுத்துள்ளது.

* கூட்டணி குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? ஓரிரு வாரங்களில் கூட்டணி குறித்து நாங்கள் அறிவிப்போம்.

* சசிகலாவை சந்திக்காததற்கு என்ன காரணம்? சசிகலாவை இதுவரையில் நான் சந்திக்கவில்லை. அவரை ஜாதிய பிம்பத்திற்குள் கொண்டுவர முயற்சி செய்வதால் நான் தனித்திருப்பதாக கூறியிருக்கிறேன். அதேநேரத்தில், அவரை சந்திக்க வாய்ப்பு கேட்டிருக்கிறேன். நான் பலமுறை கேட்டும் இதுவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சசிகலா என்னை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.

* ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூட்டணி கட்சியான உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா. நீங்கள் கேட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதா? ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை. கூவத்தூரில் எனக்கு கொடுத்த வாக்குறுதியை எடப்பாடி காப்பாற்றவில்லை. எனக்கு கொடுத்த வாக்குறுதியையே காப்பாற்றாத முதல்வர், தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதியை எப்படி காப்பாற்றியிருப்பார்? எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியால் வியாபாரிகளுக்கும், கான்ட்ராக்ட்காரர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மட்டுமே மனநிறைவு கிடைத்திருக்கும். மக்களுக்கு மனநிறைவு கிடைத்ததாக எனக்கு தெரியவில்லை.

Related Stories: