தென் மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் தூத்துக்குடியில் இன்று ராகுல்காந்தி பிரசாரம்: நாங்குநேரியில் பொதுக்கூட்டம்

நெல்லை: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 3வது கட்ட பிரசாரத்தை இன்று தூத்துக்குடியில் தொடங்குகிறார். இன்று மாலை நாங்குநேரியில் நடக்கும் ெபாதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், 3வது கட்ட பிரசாரத்தை ராகுல்காந்தி இன்று தென்மாவட்டங்களில் தொடங்குகிறார். இன்று (27ம் தேதி) காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர், வஉசி கல்லூரியில் வக்கீல்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பிற்பகல் 1.30 மணிக்கு தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே ரோடு ஷோ நடத்தி ெபாதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து தூத்துக்குடி ேகாவங்காடு பகுதியில் உப்பள தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார்.

பிற்பகல் 3 மணிக்கு முக்காணி செல்லும் அவர் குரும்பூர், ஆழ்வார் திருநகரி, நாசரேத், சாத்தான்குளத்தில் பொதுமக்களை சந்தித்துவிட்டு, மாலை 5.30 மணிக்கு நாங்குநேரியில் காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் ஏற்பாட்டில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். நாளை (28ம் தேதி) காலை 9 மணிக்கு பாளை. சேவியர் கல்லூரியில் பேராசிரியர்கள், அறிஞர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர் நெல்லையப்பர் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் டவுன் காந்தி சிலை முன்பு திறந்த வேனில் ரோடுஷோ நடத்துகிறார். அங்கிருந்து கார் மூலம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, புளியங்குடி, தென்காசி பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.  இரவு குற்றாலத்தில் தங்கி ஓய்வெடுக்கிறார். மார்ச் 1ம் தேதி கடையம், வள்ளியூர் ஆகிய பகுதிகளில் பேசி விட்டு குமரி மாவட்டம் செல்கிறார்.

Related Stories: