வனிதா பதிப்பகம் சார்பில் இணைய புத்தக கண்காட்சி

சென்னை: தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணனால் 1978ம் ஆண்டு நிறுவப்பட்ட வனிதா பதிப்பகம் 3,000க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறது. போட்டி தேர்வுக்கான நூல்ககள், 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் உரை உள்ளிட்டவைகளை வெளியிட்டுள்ளது. தேசிய விருதும், தமிழக அரசின் திருவள்ளுவர் விருதும் பெற்ற நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணனின் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்துள்ளது. தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விருது, திருப்பூர் தமிழ் சங்கம் விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளது. இதேபோல், பழம்பெரும் இலக்கியங்கள் பெரியண்ணன் உரையுடன் வெளிவந்துள்ளது. தற்போது அம்சவேணி பெரியண்ணனின் மகன் முனைவர் பெ.மயிலவேலன் இணையதளம் மூலம் புத்தக கண்காட்சி நடத்தி வாசகர்களிடையே நல்ல நூல்களை கொண்டு சேர்த்து வருகிறார். இவர் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றவர்.

Related Stories:

>