மாற்றுத்திறனாளிகள் மறியல்

சென்னை: அரசு பணி வழங்க வேண்டும், உதவி தொகையை ரூ.1000ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடந்த 10 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதை கண்டித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நந்தனம் அண்ணா சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்கள் தமிழக அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். பின்னர், மறியலில் ஈடுபட்ட பார்வைற்ற மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர்.

Related Stories: