முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம்: 20,000ல் இருந்து 25 ஆயிரமாக உயர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற பேரவையில் தற்போது உறுப்பினராக இருப்பவர், அவருடைய பதவி காலத்தில் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் படித்தொகையானது 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. சட்டமன்ற பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. சட்டமன்ற பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் இறந்துவிட்ட பிறகு, அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 10 ஆயிரத்தில் இருந்து 12,500ஆக அதிகரிக்கப்படுகிறது.சட்டப்பேரவையின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்கள் மாநில அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகத்தின் குளிரூட்டப்பட்ட பேருந்தில் அவருடைய மனைவி அல்லது உடன் இருப்பவருடன் பயணம் மேற்கொள்ளலாம்.

Related Stories: