ரவிச்சந்திரன் பரோல் வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ள தனது மகன் ரவிச்சந்திரனுக்கு நீண்ட கால பரோல் அல்லது 2 மாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் ெசய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 17க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories:

>