இன்றும், நாளையும் நடக்க இருந்த ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை

மதுரை: ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆவுடையார்கோவில் ஒன்றியம், குளத்துகுடியிருப்பு பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றுகிறேன். ஆண்டுதோறும், ஆசிரியர், தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இதன்பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும். கடந்தாண்டு கொரோனா காரணமாக கலந்தாய்வு நடக்கவில்லை. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குநர் கடந்த பிப். 18ல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு பிப். 27 மற்றும் பிப். 28ல் நடக்கும் என அறிவித்துள்ளார். இதனால் பொது மாறுதலுக்காக காத்திருந்த பலர் பாதிக்கப்படுவர். எனவே, பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பை ரத்து செய்து, பொது மாறுதல் கலந்தாய்வு முடித்த பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்  என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் (இன்று), 28ல் (நாளை) நடக்கவிருந்த பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை விதித்தார். இதேபோல், வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>