முதல்வரை கண்டித்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்: மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் காவிரி உபரி நீரை நம்பி விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், டெல்டா மாவட்டமே பாலைவனமாகும் சூழல் ஏற்படும் என கூறி இத்திட்டத்திற்கு துவக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்ப்பையும் மீறி இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் சார்பில் கண்டனம் தெரிவித்து திருவாரூர் அருகே மாவூர் பகுதியில் கருப்பு கொடியுடன் விவசாயிகள் நேற்று வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காவிரி விவசாய சங்க மாவட்டத் தலைவர் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மேட்டூர் சரபங்கா திட்டத்தை  நிறைவேற்றிய முதல்வரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதேபோல் ஓகை பகுதியிலும், தமிழக காவிரி விவசாயிகள் கருப்புக் கொடியுடன் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: