6 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன், தேனி மருத்துவக்கல்லூரி டீனாகவும், கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் சேலம் அரசு மோகன் மருத்துவக்கல்லூரி டீனாகவும், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி டீன் சாந்திமலர், மருத்துவ கல்வி இயக்குநரகம் தேர்வு குழு அதிகாரியாகவும், திருவாரூர் மருத்துவக்கல்லூரி டீன் முத்துகுமரன் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி டீனாகவும், கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி டீன் ரவீந்திரன் கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி டீனாகவும், கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா கோவை மருத்துவக்கல்லூரி டீனாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களுக்கு டீனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரவிக்குமார், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி டீனாகவும், கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் உஷா, கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி டீனாகவும், தர்மபுரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் அமுதவள்ளி, தர்மபுரி மருத்துவக்கல்லூரி டீனாகவும், மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜோசப்ராஜ், திருவாரூர் மருத்துவக்கல்லூரி டீனாவும், கோவை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ராமசந்திரன், நீலகிரி மருத்துவக்கல்லூரி டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>