கார் மோதி பைக் தீப்பிடித்தது சிஆர்பிஎப் எஸ்ஐ, மனைவி பலி

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே குன்னூர், நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (53). சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர், மனைவி கற்பகத்துடன் (50), நேற்று மதியம் திருவில்லிபுத்தூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றார். கிருஷ்ணன்கோவில் - திருவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ெசன்ற போது, அவ்வழியாக வந்த கார், பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன், கற்பகம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும், கார் மோதிய வேகத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது. கார் டிரைவர் காளிமுத்துவை (30) போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>