அகமதாபாத் நாடகத்துக்கு டெல்லியில் ரிகர்சல்!

மோதிரா ஸ்டேடியத்துக்கு சர்தார் படேல் பெயர் சூட்டப்பட்டு குறுகிய காலத்துக்குள்ளாகவே நரேந்திர மோடி ஸ்டேடியமாக மாற்றி அறிவிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு டெல்லியில் நடந்த ரிகர்சல் குறித்த பிளாஷ்பேக் இதோ!

டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் (டிடிசிஏ) பொறுப்பில் உள்ள கிரிக்கெட் அரங்கம் 1883ல் கட்டப்பட்டது.  ஆங்கிலேயேர்களால் கட்டப்பட்ட அந்த அரங்கத்திற்கு வெலிங்டன் பெவிலியன் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தில் முன்பு  சுல்தான் பெரோஸ் ஷா துக்ளக் கட்டிய கோட்டை (கோட்லா) பகுதிகள் இருந்துள்ளன.  அதனால் பெரோஸ் ஷா கோட்லா  அரங்கம் என்று அழைக்கப்பட்டு வந்தது.

டிடிசிஏ தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி 2019 ஆகஸ்டில் காலமானதும், அடுத்த மாதமே கோட்லா அரங்கின் பெயர்  அருண் ஜெட்லி ஸ்டேடியமாக பெயர் மாற்றப்பட்டது. . 2020 டிசம்பரில் அரங்கத்தின் முகப்பில் ஜெட்லி சிலையையும்   அமித்ஷா திறந்து வைத்தார். இதற்கு இந்திய அணி முன்னாள்் கேப்டன் பேடி தெரிவித்த கடும் எதிர்ப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த வெற்றிகரமான டிரெய்லர் கொடுத்த  உற்சாகத்தில்தான்  தங்களின் ஆதர்ச நாயகன்  படேலின் பெயரையே தூக்கிவிட்டு மோடியின் பெயரை அகமதாபாத் அரங்கத்திற்கு சூட்டி மெயின் பிக்சர் ஓட்டியுள்ளனர் என்கிறார்கள்.

Related Stories: