தன்னம்பிக்கைதான் காரணம்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த 2வது டெஸ்டில் அறிமுகமான ஆல் ரவுண்டர் அக்சர் படேல் (27 வயது), அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அடுத்து அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டும் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். 2014ல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியிலும், அடுத்த ஆண்டே டி20 போட்டியிலும் அறிமுகமான அக்சர், நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். நடப்பு டெஸ்ட் தொடரிலும் கூட, ஜடேஜா காயம் காரணமாக விளையாட முடியாததால் தான் அக்சருக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர் விக்கெட் வேட்டை நடத்தி முத்திரை பதித்துள்ளார். இது குறித்து கூறுகையில். ‘மூன்றாண்டுகளாக அணியில் இடம் பெறாத நிலையில், சந்திக்கும் ஒவ்வொருவரும் அது பற்றியே கேள்வி எழுப்பி நோகடித்தனர். ஆனாலும் நான் சோர்ந்துபோகவில்லை. சரியான நேரத்துக்காக காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது 100 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டும் என்று எனக்கு நானே கூறிக் கொள்வேன். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதற்கு தன்னம்பிக்கை தான் காரணம். இக்கட்டான சமயங்களில் எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், சக வீரர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி்்’ என்றார்.

Related Stories:

>