சென்னை ரயிலில் வெடிபொருட்கள்: சென்னை பெண்ணிடம் விசாரணை

திருவனந்தபுரம்: சென்னை  - மங்களூரு சூப்பர் பாஸ்ட் ரயில் நேற்று அதிகாலை ேகரள மாநிலம், கோழிக்கோடு  ரயில் நிலையம் வந்தது. அப்போது, ரயில்வே போலீசார் திடீர் சோதனை  நடத்தினர். இதில், ஒரு பெட்டியின் இருக்கைக்கு அடியில் ஒரு மர்ம பை  இருந்தது. போலீசார் அதை பரிசோதித்தபோது சக்தி வாய்ந்த 117  ஜெலட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்கள் இருந்தன. இதனால்,  அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த இருக்கையில் அமர்ந்திருந்த சென்னையை  ேசர்ந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>