பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு: முதலீட்டாளர்களுக்கு 5.37 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் நேற்று வரலாறு காணாத சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,939 புள்ளிகள் சரிந்தது. இதனால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ₹5.37 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

 மும்பை பங்குச்சந்தை குறியீடு நேற்று முன்தினம் 51,039.31 புள்ளிகளில் முடிந்தன. ஆனால், நேற்று துவக்கத்திலேயே சரிவுடன் 50,256.71 புள்ளிகளில் தொடங்கியது. அதிகபட்சமாக 50,400.31 புள்ளிகள் வரை சென்றது. துவங்கிய சிறிது நேரத்திலேயே பங்குச்சந்தை சரிவை நோக்கி சென்றது. வர்த்தக இடையில் 48,890.48 புள்ளிகள் வரை சரிந்தது. மாலை வர்த்தக முடிவில், முந்தைய நாளை விட 1,939.32 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. இது முந்தைய நாளை விட 3.8 சதவீதம் சரிவாகும்.

 வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. சர்வதேச சந்தைகளில் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் இமாலய சரிவை சந்தித்தது, முதலீட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் மொத்த மதிப்பு ₹2,06,18,471.67கோடியாக இருந்தது. இது நேற்று ஒரே நாளில் ₹5,37,375.94 கோடி சரிந்து ₹2,00,81,095.73 கோடியானது. இதற்கு முன்பு கடந்த வார இறுதியிலும், இந்த வார துவக்கத்திலும் 2 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட தொடர் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ₹5,67,184.34 கோடி இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>