கட்டணம் செலுத்தும் விவகாரம்: 3 செய்தி நிறுவனங்களுடன் பேஸ்புக் வர்த்தக ஒப்பந்தம்: ஆஸி.யின் கடிவாளம் பலன் அளித்தது

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் செய்திகளை வெளியிட கட்டணம் செலுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம், 3 தனியார் செய்தி நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் செய்திகள் வெளியிட ராயல்டி செலுத்த வகை செய்யும் சட்டம், திருத்தத்துடன் பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தான் விரும்பும் செய்தி நிறுவனங்களுடன் மட்டும் இவை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான நியூஸ் கார்ப், செவன் வெஸ்ட் மீடியா ஆகியவற்றுடன் கூகுள் ஏற்கனவே செய்திகளுக்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதையடுத்து, கூகுளின் பார்முலாவை பின்பற்றி பேஸ்புக் நிறுவனமும் செய்தி நிறுவனங்களுக்காக  7,300 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், பிரைவேட் மீடியா, ஸ்க்வார்ட்ஸ் மீடியா, சோல்ஸ்டைஸ் மீடியா என்ற 3 தனியார் செய்தி நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் நேற்று, முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த 2 மாதங்களில் இச்செய்தி நிறுவனங்களுடன் பரிபூரண ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக  பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: