வாவ்... அற்புதமான கருத்துகள் திருக்குறள் மீது ராகுல் காதல்: படிக்க தொடங்கி விட்டார்

புதுடெல்லி: திருக்குறலால் ஈர்க்கப்பட்டு, அதை படித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலகப் பொதுமறை நூல் என்ற பெருமைக்குரியது திருக்குறள். தற்போது, இதற்கு புதிய பரிணாமம் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் முதல், பல்வேறு கட்டங்களில் வடமாநில தலைவர்களால் கூட திருக்குறள் கூறப்பட்டு, விளக்கம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி இதன் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். தற்போது அவர் தான் பேசும் பெரும்பாலான கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் திருக்குறளை சுட்டிக்காட்ட தவறுவது இல்லை. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் திருக்குறள் மீது மிகுந்த ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். இது பற்றி நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திருக்குறளின் கருத்துகள் தன்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தி உள்ளதாகவும், அதை மிகுந்த ஆர்வத்துடன் தற்போது படித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>