புது நிறுவனங்களுக்கு கடன் வழங்க வசதி: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பான கருத்தரங்கில்,  காணொலி காட்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தொற்றின் போது 90 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு  2.4 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவைகளுக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் கடன் தொகை உயர்த்தப்பட வேண்டியது அவசியமாகும். நிதித்துறை சேவையில் உள்ள நிறுவனங்கள் கிராமங்கள், சிறு நகரங்களில் உள்ள தொழில் முனைவோரின் தேவையை அறிந்து அவர்களை தற்சார்பு இந்தியாவின் வலிமையாக மாற்ற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், அதற்கேற்ப கடன் வசதிகளுக்கும் அதே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். எனவே, நிதி தொடர்பான சேவைகள் நிதி தொழில்நுட்பம், ஸ்டாப் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: