தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன!: சுனில் அரோரா அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது 34.73 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1,559 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

Related Stories:

>