தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்!: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

டெல்லி: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். தமிழகம் தவிர புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் - 234, புதுச்சேரி - 30, கேரளா - 140, மேற்கு வங்கம் - 294, அசாம் - 126 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

Related Stories:

>