மக்களுக்கு தேவையான திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை!: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: மக்களுக்கு தேவையான திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையின்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரமும் அளிக்கப்படும் என பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories:

>