கர்நாடக அரசு தனது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.22 லட்சம் வரை புதிய கார்களை வாங்க ஒப்புதல்..!!

பெங்களூரு: கர்நாடக அரசு தனது அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.21 லட்சம் முதல் ரூ.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை புதிய கார்களை வாங்க ஒப்புதல் அளித்திருக்கிறது. கொரோனாவால் மாநிலத்தின் பொருளாதாரம் சீர் குலைந்திருந்தும், எம்.பிக்கள், அமைச்சர்களின் சொகுசான வாழ்க்கைக்கு எந்த பிரச்னையும் இல்லை. இவர்களுக்கு கார் வாங்குவதற்கான தொகையை அரசு அதிகரித்துள்ளது. முன்னதாக கர்நாடகாவின், அனைத்து எம்.பி.,க்கள், அமைச்சர்களுக்கு, புதிதாக கார் வாங்க தலா, 22 லட்சம் ரூபாயை, மாநில அரசு வழங்கி வந்தது. இத்தொகையை அதிகரிக்கும்படி, எம்.பி.,க்கள், அமைச்சர்கள் நெருக்கடி கொடுத்தனர். எனவே அரசு, நிதித்துறைக்கு கடிதம் எழுதியது. நிதித்துறையும் இக்கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தின் அனைத்து எம்.பி.,க்கள், அமைச்சர்களுக்கு, கார் வாங்கும் தொகையை 22 லட்சத்திலிருந்து 23 லட்சம் ரூபாயாக அரசு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.22 லட்சம் வரை புதிய கார்களை வாங்க கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related Stories: