புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி விகிதத்தை 2% உடனடியாக குறைக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். 2% வாட் வரி குறைப்பால் புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைய வாய்ப்புள்ளது. வரிக்குறைப்பின் மூலம் மக்களுக்கு மொத்தம் ஆண்டுக்கு ரூ.71 கோடி அளவுக்கு பயன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.55ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.86.08 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. பிப்ரவரி 1ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.88.17 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.81.27ஆகவும் விற்பனையானது.

புதுச்சேரியில் பெட்ரோல் விலை இந்த மாதத்தில் அதிகபட்சமாக பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.92.66 வரை சென்றது. குறைந்தபட்சமாக பிப்ரவரி 3ஆம் தேதி ரூ.88.11ஆக இருந்தது. டீசல் விலை இந்த மாதத்தில் அதிகபட்சமாக பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.86.19 வரை சென்றது. குறைந்தபட்சமாக பிப்ரவரி 3ஆம் தேதி ரூ.81.21ஆக இருந்தது.

Related Stories:

>