பழைய காட்பாடியில் மாடுவிடும் விழா காளைகள் முட்டியதில் 16 பேர் படுகாயம்

வேலூர் : பழைய காட்பாடியில் காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.

பொங்கல் பண்டிகையொட்டி வேலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதம் 14ம் தேதி முதல் இம்மாத இறுதியுடன் காளை விடும் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பழைய காட்பாடியில் காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது.

இதில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 69 காளைகள் கலந்துகொண்டன. போட்டி தொடங்குவதற்கு முன்பு மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார்கள் பாலமுருகன், செந்தில், கோட்டீஸ்வரன், குமார் ஆகியோர் முன்னிலையில், விழா குழுவினர் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதன்பின்னர் காளைவிடும் விழா காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது. ஒவ்வொரு காளையும் தலா 2 சுற்றுகள் விடப்பட்டன.

இதில் எதிர்பாராதவிதமாக காளைகள் முட்டியதில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிசிக்சை அளிக்கப்பட்டது. போட்டியில், குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு காளைகளை உற்சாகப்படுத்தினர்.

Related Stories: