மந்தித்தோப்பு ஓடையில் பாலம் கட்ட வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

வத்திராயிருப்பு : மந்தித்தோப்பு ஓடையில் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் உள்ளது. சேதுநாராயணபுரத்தில் இருந்து மந்தித்தோப்பு வரை செல்லும் சாலையின் இருபுறமும் தோப்பு மற்றும் வயல்வௌிகள் உள்ளன. மந்தித்தோப்பு செல்லும் வழியில் ஓடை உள்ளது. இந்த ஓடையில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக சென்றால் கடந்து செல்ல முடியாது. மந்தித்தோப்பிற்கு செல்வதற்கு ஓடையின் கரையில் கற்கள் பதித்து சாலைபோல் அமைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழைக்கு கற்கள் பெயர்ந்து வெளியே தெரிகிறது. இதனால் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது.

சேதுநராயணபுரத்தில் இருந்து மந்தித்தோப்பு வரை உள்ள தோட்டங்களுக்கும், தாணிப்பாறை வரையுள்ள தோட்டங்களுக்கும் செல்லக்கூடிய பாதையாக இது இருந்து வருகிறது. சதுரகிரியில் விசேச நாட்களுக்கும் இந்த வழியே பக்தர்கள் சென்று வருவார்கள். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க ஓடையை கடந்து செல்வதற்கு பாலம் ஒன்று கட்ட வேண்டும். அதுவரை, தற்போது மந்தித்தோப்பு வழியாக செல்வதற்கு ஓடையின் கரையில் பதித்துள்ள கற்களை வௌியே தெரியாதவாறு வாகனங்கள் இலகுவாக சென்று வரும் வகையில் சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>